சம்பா சாகுபடிக்கு உழவு… பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துகிறது வரப்பு உளுந்து விதைப்பின் நன்மைகள்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் கிராமத்தில் வரப்பு உளுந்து விதைப்பு பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து முன்னோடி விவசாயி பொன்முடி கூறியதாவது: பொதுவாக நெற்பயிரில் பூச்சி, நோய், களை வந்த பிறகு கட்டுப்படுத்துவதை விட வருமுன் காப்பதே சிறந்தது. தொடக்கத்திலேயே ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி வந்தால் நெற்பயிரில் பூச்சி, நோய் தாக்குதலை பெருமளவு கட்டுப்படுத்தி கூடுதல் மகசூல் பெறுவதோடு சாகுபடி செலவையும் குறைக்கலாம். இதில் நெல் வயல் வரப்புகளில் உளுந்து விதைத்தலை மேற்கொள்ள வேண்டும். வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் உளுந்து விதைக்க வேண்டும். இந்த உளுந்து வளர்ந்தவுடன் பயிரை தாக்காத அசுவணிகள் உருவாகும். ஏராளமான பொறி வண்டுகள் இவற்றால் கவரப்பட்டு இவற்றை பிடித்து உண்ணும். இந்த பொறிவண்டானது நெற் பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி இனமாகும். இவை நெல் பயிரை தாக்கக்கூடிய சாறு உறிஞ்சும் பூச்சிகளை தாக்கி, அவற்றை உண்டு நெற்பயிரை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்துகிறது.

The post சம்பா சாகுபடிக்கு உழவு… பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துகிறது வரப்பு உளுந்து விதைப்பின் நன்மைகள் appeared first on Dinakaran.

Related Stories: