சமூக நீதிக்கான பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி, ஜூலை 23: 2023ம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்காக பாடுபடுவா்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பொியார் விருது 1995 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பொியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 விருது தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளா் தமிழ்நாடு முதலமைச்சரால் தோ்வு செய்யப்படுகிறார்.

2023ம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பொியார் விருது’’ வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பாிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம். தங்களது விண்ணப்பம் சுயவிவரம், முழு முகவாி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்கள் செப்.15 க்குள் வந்து சேர வேண்டும். எனவே திருச்சி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் அவா்களது பெயா், சுயவிவரம் மற்றும் முழு முகவாியுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய காலத்திற்க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

The post சமூக நீதிக்கான பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: