×

சமயபுரம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 சகோதரர்களுக்கு வலை

சமயபுரம், மே 8: சமயபுரம் அருகே டாஸ்மாக் பாரில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சமயபுரம் அருகே உள்ள கள்ளிக்குடி பகுதியை சேர்ந்தவர் மகன் பாபு (28). இவர் சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே மாலை கட்டுவது மற்றும் கூலி வேலைகள் செய்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பாபு சமயபுரம் நால்ரோடு அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு மது அருந்து சென்றார். பாரில் அமர்ந்து மது அருந்திவிட்டு பாபு வெளியே வந்து வாசற்படியை தாண்டியபோது பாருக்குள் இருந்து வந்த 3 பேர் பாபுவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த கொலைசம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பாபுவை கொலை செய்தவர்களைப் பற்றி டாஸ்மாக் பாரில் உள்ள சிசிடிவி காட்சிகளை
கைப்பற்றி கொலையாளிகள் குறித்து விசாரணை செய்தபோது, சமயபுரம் அருகே வி.துறையூர் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரின் மகன்கள் சுள்ளான் (எ) வெங்கடேசன்(25), கடலை கணேசன் (35), விநாயகமூர்த்தி (23), வள்ளி அருணா என்பதும், இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post சமயபுரம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 சகோதரர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Tasmac ,
× RELATED திருச்சி அருகே பயங்கரம் காதலை ஏற்க மறுத்த பெண் கொடூர கொலை: வாலிபர் கைது