கோவில்பட்டி அருகே கங்கன்குளத்தில் மின்னொளி கபடி போட்டி

கோவில்பட்டி, பிப்.25: கோவில்பட்டி அருகே உள்ள கங்கன்குளம் புனித லூர்து அன்னை ஆலய வளாகத்தில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. கபடி போட்டியை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அழகர்சாமி தலைமையில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அவர், ஜெயலலிதா படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மாவதி கனகசுந்தரம், ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், நகராட்சி கவுன்சிலர் செண்பகமூர்த்தி, மாவட்ட மாணவரணி சண்முககனி, நகர மாணவரணி சாத்தூரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கோவில்பட்டி அருகே கங்கன்குளத்தில் மின்னொளி கபடி போட்டி appeared first on Dinakaran.

Related Stories: