மதுரை: மதுரை மேலமடையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 30 நாற்காலிகளையும், பேனர்களையும் கிழித்து சேதப்படுத்திவிட்டு மர்மநபர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மேலமடையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் !
