×

கோதுமை சிப்ஸ்

செய்முறை: கோதுமை மாவை ஒரு பேஸினில் போட்டு, உப்பு, வெண்ணெய், ஓமம், சமையல் சோடா சேர்த்துப் பிசிறவும்.  இதில் நீர் தெளித்து, கெட்டியான பூரி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும் அப்பளக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி சிறிய ஆரஞ்சு சைஸ் அளவில் பிசைந்த மாவை எடுத்து உருட்டி, வெறும் மாவில் புரட்டவும். இதை அப்பளக்கல்லில் சப்பாத்தி போல திரட்டவும். பிறகு, கத்தியால் சின்ன பிஸ்கட் வடிவில் அரை இஞ்ச் துண்டுகளாக ‘கட்’ செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஒரு கைப்பிடி அளவு சிப்ஸை போட்டு, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, சிறிது சிவந்ததும் திருப்பிப் போடவும். சிப்ஸ் பொன்னிறமாக, முறுகலாக ஆனதும், ஒரு வடிதட்டில் எடுக்கவும்.  இதைப் போல் மீதமுள்ள மாவையும் சிப்ஸ்களாக செய்து, ஆறவிட்டு, எல்லாவற்றையும் காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து பயன்படுத்தவும்….

The post கோதுமை சிப்ஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அவகோடா பிரெட் பர்பி