சென்னை: தமிழகத்துக்கு மேலும் 13.16 லட்சம் கொரோனா தடுப்பூசி நேற்று வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 4 ஆயிரத்தும் மேற்பட்ட முகாம்களில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 34 லட்சத்து 5 ஆயிரத்து 800 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளும், 5 லட்சத்து 67 ஆயிரத்து 520 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளும் வந்தன. இதில் 8 லட்சம் தடுப்பூசி கையிருப்புகள் தற்போது உள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கு நேற்று காலை 2.14 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளும், இரவில் 11.02 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் என 13.16 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது.
