கொள்ளிடம் வட்டாரத்தில் நன்னீரில் கெண்டை மீன் வளர்ப்பு திறன்மேம்பாடு பயிற்சி

கொள்ளிடம்,ஆக2: கொள்ளிடம் வட்டாரத்தில் நன்னீரில் கொண்டை மீன் வளர்ப்பு திறன்மேம்பாடு பயிற்சி 3 நாட்கள் நடக்கிறது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார ஆத்மா திட்ட அலுவலர் அரவிந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் நாகப்பட்டினம் நபார்டு வங்கி இணைந்து ‘நன்னீரில் கெண்டை மீன் வளர்ப்பு தொழில்நுட்பத்தை மேற்கொள்வதற்கான திறன்மேம்பாடு பயிற்சி சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 9ம்தேதி முதல் 11ம்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் நன்னீரில் கெண்டை மீன் வளர்ப்பு, குளம் பராமரிப்பு, தீவனம் அளித்தல், தீவனம் தயாரிப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, மீனில் மதிப்புகூட்டிய பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியானது முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 25 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். எனவே இப்பயிற்சியில் கலந்து கொள்ள நாகை மயிலாடுதுறை மாவட்டத்தைசார்ந்த ஆர்வமுள்ள விவசாயிகள், மகளிர், இளைஞர்கள் நிலையத்தின் தொலைபேசி எண் 04365-299806 அல்லது மீன்வள விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் ஹினோ பெர்னாண்டோவின் 9865623423 என்ற அலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.பெயரைபதிவு செய்து கொண்ட விவசாயிகள் மேல் குறிப்பிட்ட அனைத்து பயிற்சி நடைபெறும் நாட்களிலும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கொள்ளிடம் வட்டாரத்தில் நன்னீரில் கெண்டை மீன் வளர்ப்பு திறன்மேம்பாடு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: