வனத்துறை சார்பில் சிட்டுக்குருவிகளுக்கு கூடுகள் வைக்கப்பட்டது

பந்தலூர் : பந்தலூர் அருகே நாடுகாணி வனச்சரகம் ஜீன்பூல் பூங்காவில் உலக சிட்டுக் குருவிகள் தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகளுக்கு வனத்துறை சார்பில் கூடுகள் வைக்கப்பட்டன. கூடலூர் வனகோட்டம்  நாடுகாணி வனச்சரகத்தில் அமைந்துள்ள ஜீன்பூல் பூங்காவில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் நேற்று முன்தினம்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  

மாவட்ட வன அலுவலர்  கொம்மு ஓம்காரம்  தலைமை வகித்தார். வனச்சரகர் பிரசாத் வரவேற்றார்.  சிட்டுக்குருவிகளின் சிறப்புகள் குறித்தும்  அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்தும்  பேசப்பட்டது. தொடர்ந்து ஜீன்பூல் பூங்காவின் பல்வேறு இடங்களில் சிட்டு குருவிகளுக்கு  கூடுகள் வைக்கப்பட்டன. இதில் வனச்சரகர்கள் மற்றும் கூடலூர் வனக் கோட்டத்தில் உள்ள வன பணியாளர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories: