×

கொரோனா தடுப்பூசி போட்டால் 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது : தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் உத்தரவு!!

டெல்லி : கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட நாளில் இருந்து 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது என்று தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்சின் ’எனும் 2 தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனாவுக்கு எதிராக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 4.50 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஒரேநாளில் சுமார் 4.62 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்களைத் தொடர்ந்து, தற்போது இணை நோய்களுடன் போராடுகிற 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.ஒவ்வொருவரும் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட 28 நாளில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். இந்நிலையில் தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் இயக்குநர் சுனில் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது என்றும் முதல் டோஸ் 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போட வேண்டும் என்பதால் மொத்தம் 56 நாட்கள் ரத்ததானம் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவரின் ரத்தத்தைப் பெற்றுக் கொள்பவருக்கு ரத்தத்தில் உள்ள கொரோனா எதிரணுக்கள் அந்தநோயுள்ளவரின் உடலையும் பாதிக்க வாய்ப்புள்ளது. அதுவே 28 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அந்த எதிரணுக்கள் பயனாளியின் உடலை எந்த விதத்திலும் பாதிக்காது. இருப்பினும் இந்த அறிவிப்பால் ரத்த வங்கிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது….

The post கொரோனா தடுப்பூசி போட்டால் 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது : தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : corona ,National Blood Transfusion Council ,Delhi ,Dinakaran ,
× RELATED இளைஞர் காங். தலைவராக உதய் பானு சிப் நியமனம்