×

கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு மாடுகள்: பொதுமக்கள் அச்சம்

 

கொடைக்கானல், ஜூன் 16: கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் காட்டு மாடுகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். கொடைக்கானலில் அவ்வப்போது காட்டு மாடுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு மாடுகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று கொடைக்கானல் நாயுடுபுரம் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு மாடுகள், அங்குள்ள புல்வெளியில் மேய்ந்தன. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர். எனவே காட்டு மாடுகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு மாடுகள்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் காட்டு மாடுகள்