×
Saravana Stores

அறுவடைக்கு தயாரான செண்டு மல்லி பூ

 

வெள்ளக்கோவில், அக்.5: முத்தூர் சுற்று பகுதியில் செண்டு மல்லி பூ அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டு வலசு, வாய்க்கால் மேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். செண்டு மல்லி, கோழிக் கொண்டை போன்ற பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

சீசன் காரணமாக, செண்டு மல்லி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. ஆயுத பூஜைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், பூஜை தினத்தில் விற்பனை செய்வதற்காக விடப்பட்டுள்ளது. பூஜை தினத்துக்கு முதல் நாள் பறிக்கப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது. பூ விளைச்சல் அதிகரித்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post அறுவடைக்கு தயாரான செண்டு மல்லி பூ appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Muttur ,Metangkattu Valasu ,Vaikkal Medu ,
× RELATED வெள்ளகோவிலில் முருங்கை விலை உயர்வு:கிலோ ரூ.62க்கு விற்பனை