வெண்கலப் பதக்கம் யாருக்கு? இங்கிலாந்துக்கு பெல்ஜியம் சவால்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரில் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்ற, இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.ரஷ்யாவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதலாவது அரை இறுதியில், பெ;ல்ஜியம் அணி 0-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அடுத்து 2வது அரை இறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின. இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது பாதியில் கோல் அடித்து சமன் செய்த குரோஷியா, கூடுதல் நேரத்தில் மேலும் ஒரு கோல் போட்டு 2-1 என்ற கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது.

பரபரப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் நாளை மோதவுள்ளன. இந்த நிலையில், அரை இறுதியில் தோற்ற இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் வெண்கலப் பதக்கத்துக்காக இன்று மோதுகின்றன. இப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் இரவு 7.30க்கு தொடங்குகிறது. அதிக கோல் அடித்த வீரருக்கான தங்கக் காலணி விருது பெற இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதால், இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹாரி கேன் 6 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு சவால் விடுக்கும் வகையில் பெல்ஜியம் வீரர் ரோமெலு லூகாகு (4), பிரான்சின் கிரீஸ்மேன் (3), கைலியன் பாப்பே (3) ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர். 1996ம் ஆண்டு உலக கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து அணிக்கு, 1990ல் 4வது இடம் பிடித்ததே 2வது சிறப்பான செயல்பாடாக உள்ளது. இன்று வெண்கலப் பதக்கம் வென்று அதை முறியடிக்க ஹாரி கேன் & கோ முயற்சிக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: