கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை கே.வி.குப்பம் அருகே

கே.வி.குப்பம், ஆக.5: கே.வி.குப்பம் அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கே.வி.குப்பம் அடுத்த பி.என்.பாளயம் ஊராட்சியில் பாறையூர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் சோமு(28). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன் மகாலஷ்மி(23) என்பவருடன் திருமணம் ஆனது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் சோமு அவ்வபோது மது குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம். இதனிடையே நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மனைவி மகாலஷ்மி தனது அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என சோமுவிடம் கூறியுள்ளார். அதற்கு சோமு நானே பைக்கில் அழைத்து செல்வதாக கூறினார். அதற்கு மகாலஷ்மி, நீங்கள் குடித்துவிட்டு வண்டியை எடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சோமு வீட்டில் உள்ள படுக்கறைக்கு சென்று தாழ்பாலிட்டு கொண்டு வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதில் சந்தேகமடைந்த மகாலஷ்மி கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனால் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சோமு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், லத்தேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் சோமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக அவரது மனைவி மகாலஷ்மி கொடுத்த புகாரில் பேரில் லத்தேரி சப்-இன்ஸ்பெக்டர் ரேகா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

The post கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை கே.வி.குப்பம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: