கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் புதிய வாக்காளர்களை அதிகமாக சேர்க்க வேண்டும்

 

நாகப்பட்டினம்,நவ.19: அனைத்திந்திய 70வது கூட்டுறவு வார விழா நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாளவிநாயகம் அமுல்ராஜ் வரவேற்றார். கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் ஆகியவற்றை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பயிர் கடன், கால்நடை கடன், மகளிர் சுய உதவி குழு கடன், தாட்கோ கடன் என பல்வேறு வகையில் ரூ.411 கோடிக்கு கடன்கள் வழங்கி சாதனை படைத்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக வழங்கப்படும் கடன்களை பெறுபவர்கள் தாங்கள் வளர்ச்சி பெறுவதுடன், நாட்டையும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். இதற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் வாங்கிய கடன்களை திரும்பி செலுத்த வேண்டும். ஒரு குடும்பத்திற்கு மட்டும் இன்றி நாட்டின் வளர்ச்சிக்கு கூட்டுறவு முக்கிய தூண் போல் உள்ளது.

கூட்டுறவு மூலம் கடன் பெறுபவர்கள் அரசு சார்பில் விடப்படும் டெண்டர்கள் எடுக்க வேண்டும். ட்ரோன் போன்ற புதிய அறிவியல் தொழில் நுட்பம் நிறைந்த சாதனங்களை வாங்கி விவசாயம் வளர்ச்சி அடைய உதவி செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கம் வாயிலாக இது போல் புதுமையான யோசனைகளை கொண்டு வரவேண்டும். கூட்டுறவு சங்கங்கள் கடன்களை பெற்று அனைவரும் முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி திட்ட விளக்க உரையாற்றினார். துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

The post கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் புதிய வாக்காளர்களை அதிகமாக சேர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: