குளிர்சாதன வசதியில்லாமலேயே மருந்துகளை பாதுகாக்கலாம்!

நன்றி குங்குமம் டாக்டர் புதுமைநோய்த்தடுப்பு மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் அதன் வீரியம் குறையும், சிகிச்சை பலனளிக்காமலும் போகும். எனவே, குளிர்சாதன வசதி என்பது சில மருந்துகளுக்கு தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. இதற்கு மாற்றுவழியாக ஜெல் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது மக்கள் பயன்பாட்டுக்கு வர தயாராகவும் உள்ளது.குளிர்சாதன பெட்டி வசதியில்லாத இடங்களிலும், பயணங்களிலும் தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக; வைத்திருக்கக்கூடிய புதிய ஜெல் ஒன்றினை தற்போது கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவின் மெக்மாஸ்டர் வேதி பொறியாளர்களின் குழு.மலைப்பிரதேசங்கள், காட்டுப்பகுதிகள், புறநகர் சிற்றூர்கள் போன்ற போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் நோய் பரவினால், அந்த இடங்களுக்கு தடுப்பு மருந்துகளை குளிர்சாதன வசதியுடன் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது எப்போதும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக பலவகை தடுப்பு மருந்துகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டிய சூழல் இருப்பதே இதற்குக் காரணம்.தற்போது இதற்கு சிறந்த மாற்று வசதியாக உள்ள ஒரு புதிய வகை ஜெல்லினை பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து; உருவாக்கியிருக்கிறது இந்த பொறியாளர்கள் குழு. இந்த ஜெல் குளிர்சாதன பெட்டி இல்லாத சூழலிலும், 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நிலவும் இடங்களிலும் மருந்துகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இந்த கடும் வெப்பநிலையிலும் 8 வாரங்களுக்கு மருந்துகளை கிருமித் தொற்று ஏற்படாமலும், அதன் தரம் தாழ்ந்துவிடாமலும் காப்பாற்றுகிறது. ;எபோலா, ஜிகா, இன்ஃபுளுயென்ஸா போன்ற கடுமையான நோய்களுக்கான மருந்துகளை பத்திரமாக எடுத்துச் சென்று கட்டுப்படுத்த இந்த தடுப்பு ஜெல் மிகவும் உதவியாக இருக்கப்போகிறது. இந்த புதிய ஜெல்லுக்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டுக் கழகமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே, இந்த ஜெல் விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருப்பது மகிழ்ச்சியான செய்தி.– கௌதம்

The post குளிர்சாதன வசதியில்லாமலேயே மருந்துகளை பாதுகாக்கலாம்! appeared first on Dinakaran.

Related Stories: