திருச்சுழி, அக்.25: திருச்சுழி அருகே ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரையை சேர்ந்த திருக்கண்ணன், ராமர் அய்யர் ஆகிய இருவருக்கும் கிராமத்திற்கு அருகில் தோட்டம் உள்ளது. இவர்களது தோட்டத்தில் ஆடுகள் மற்றும் மாடுகள் அடிக்கடி நுழைந்து பயிர்களை சேதம் செய்ததாக கூறப்படுகிறது.
எனவே குருணை மருந்தை அரிசியில் கலந்து தோட்டத்தில் வைத்ததாக தெரிகிறது. இதனை சாப்பிட்ட பெருமாள், சரவணன், சிவராமன் ஆகியோரின் 6 ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கண்ணன், ராமர் அய்யர் ஆகிய இருவர் மீதும் பரளச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post குருணை மருந்து வைத்து ஆடுகள் கொலை appeared first on Dinakaran.