கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் லாரி மோதி டிரைவர் பரிதாப பலி

கும்மிடிப்பூண்டி, ஆக. 6: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் லாரி மோதி டிரைவர் பலியானார். கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈசா என்ற பெரிய ஏரி உள்ளது. இந்த பெரிய ஏரியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மண் எடுப்பதற்கு பொதுப்பணித்துறை சார்பாக குவாரி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, தச்சூர் கூட்டு, செங்குன்றம், புழல், அம்பத்தூர், எளாவூர், சுண்ணாம்புகுளம், ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, கரடிபூத்தூர், பாப்பன்குப்பம், பூவலம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டுமான பணிகளுக்கு மேற்கண்ட கோரி மண் தார்ப்பாய் மூடாமல் எடுத்து செல்வது வழக்கம். இதனால் சாலைகள், செல்லும் பொழுதும் குடியிருப்பு பகுதி செல்லும் பொழுதும் பெரிய மண் கட்டிகள் விபத்துக்குள்ளாகி இருசக்கர வாஎன ஒட்டிகள் நிலைத்தடுமாறு கீழ் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ராக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன்குமார் (31) இவர் கும்மிடிப்பூண்டி சேர்ந்த லாரி உரிமையாளர் ஏஎல்எஸ் பாஸ்கரனிடம் மதன்குமார் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். பின்னர் மதன்குமார் கன்னியம்மன் கோயில் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குவாரி மண் லோடு எடுப்பதற்காக வந்திருந்த அப்போது மதியம் சுமார் 3 மணி அளவில் உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக தச்சர் கூட்டு சாலை பகுதியைச் சேர்ந்த லாரி ஒன்று முன்பக்கமாக மோதி சம்பவ இடத்திலேயே மதன் குமார் உயிரிழந்தார். இதை அறிந்த சிப்காட் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி வந்தபோது உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரித்தி, இழப்பீடு வாங்கித் தருவதாக கூறிய பின்னர் கூட்டம் கலைந்து சென்றது. பின்பு உடலை போலீசர்க்கை பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற டிரைவர் வெங்கடேசனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

The post கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் லாரி மோதி டிரைவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: