குமரியில் சாரல் மழை நீடிப்பு

நாகர்கோவில், செப். 9: குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை நீடித்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. மலையோர பகுதிகளிலும் மிதமான மழை இருந்தது. நேற்று காலை நிலவரப்படி சிற்றார் 1, 8.2 மில்லி மீட்டர், கன்னிமார் 3.8, நாகர்கோவில் 1, பேச்சிப்பாறை 2.4, பெருஞ்சாணி 7.6, புத்தன் அணை 7, சுருளோடு 5.4, பாலமோர் 9.2, திற்பரப்பு 3.2, அடையாமடை 3.1, முள்ளங்கினாவிளை 4.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 18.47 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 37.80 அடியாகவும் உள்ளன. சிற்றார் 1, 11.28, சிற்றார்2, 11.38 அடியாகவும் உள்ளன. பொய்கை 9.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு 3.28 அடியாகவும் உள்ளன. முக்கடல் அணை நீர் மட்டம் மைனஸ் 11 ஆக உள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 530 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு 181 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ சாகுபடி முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த வருடம் போதிய அளவில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கி இருப்பதால், கும்ப பூ சாகுபடிக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

The post குமரியில் சாரல் மழை நீடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: