குட்கா விற்ற 39 பேர், சூதாடிய 53 பேர் கைது

 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 39 பேர் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 53 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை தடுப்பது மற்றும் சூதாட்டத்தை தடுப்பது குறித்து, எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதுமாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, ஓசூர், காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி, குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளி, போச்சம்பள்ளி, கந்திகுப்பம், மகாராஜாகடை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெலமங்கலம், நாகரசம்பட்டி, கே.ஆர்.பி டேம், மத்திகிரி, பாகலூர், பேரிகை, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 53 பேர், பெட்டி கடைகளில் குட்கா விற்ற 39 பேர் மற்றும் கஞ்சா விற்ற 3 பேர் என மொத்தம் 95 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post குட்கா விற்ற 39 பேர், சூதாடிய 53 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: