கீழ்வேளூர் அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

கீழ்வேளூர், செப்.25: நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு நூற்றாண்டு விழா குழு தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில் ஸ்மாட் வகுப்பறையை கீழ்வேளூர் எம்எல்ஏ நாகைமாலி திறந்து வைத்தார்.

பள்ளியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்மாட் வகுப்பை நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் தொடங்கி வைத்து, பள்ளியின் நூற்றாண்டு மலரை வெளியிட்டார். பள்ளி நூற்றாண்டு மலரின் முதல் பிரதியை முன்னாள் அமைச்கரும், தாட்கோ தலைவர் மதிவாணன் பெற்று கொண்டுடார். புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை டிஆர்ஓ பேபி திறந்து வைத்து பேசினார். விழாவில் வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன், உறுப்பினர் அட்சயலிங்கம், பேரூராட்சி தலைவர் இந்திராகாந்திசேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post கீழ்வேளூர் அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: