கூடலூர்: கூடலூர் அருகே காட்டு யானைகள் பழங்குடியினரின் வீடுகளை சேதப்படுத்தி சூறையாடியதோடு வீட்டிலிருந்த அரிசி, பருப்பினை சாப்பிட்டு சென்றன. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள புலியம்பாறை பகுதியில் உள்ளது கோழிக்கொல்லி ஆதிவாசி குடியிருப்பு. கடந்த 24ம் தேதி இரவு குடியிருப்புக்குள் நுழைந்த 5 காட்டு யானைகள் கோத்தன், சங்கரன், குஞ்சன் ஆகியோரது வீடுகளை சூழ்ந்தன.இரவு நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது காட்டு யானைகள் சுற்றி வளைத்து வீட்டை உடைத்து சேதப்படுத்தின.
கூடலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: வீடுகளை சேதப்படுத்தி அரிசி, பருப்பினை ருசித்தன
