கிம்ஸ் ஹெல்த் இலவச இதய மருத்துவ முகாம் நாகர்கோவில் ஹோம் சர்ச் வளாகத்தில் நடக்கிறது

நாகர்கோவில், ஏப்.11: கிம்ஸ்ஹெல்த் மருத்துவமனை சார்பில் இதயவியல் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாம் சனிக்கிழமை ஏப்ரல் 13ம் தேதி, காலை 10 மணி முதல் 2 மணி வரை நாகர்கோவில் CSI ஹோம் சர்ச் வளாகத்தில் உள்ள ஆலன் ஹாலில் நடைபெறும். இம்முகாமில் ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனைகள் மற்றும் மருத்துவர் அறிவுறுதலுக்கேற்ப இசிஜி பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். மேலும் கிம்ஸ் மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவர் தினேஷ் டேவிட் தலைமையில், இதய மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்று பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் மருத்துவ ஆலோசனை வழங்குவார்கள். கிம்ஸ்ஹெல்த் மருத்துவமனை விரைவில் நாகர்கோவில் சுங்காங்கடை பகுதியில் துவங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இப் புதிய அதி நவீன பல் நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இம்மருத்துவமனை இன்னும் 3 அல்லது 4 மாத காலத்தில் துவங்கப்படும் என்றும், இதில் புற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிறப்பு மருத்துவ பிரிவுகளும் அமைந்திருக்கும் என்றும், இதன் மூலம் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மக்கள் பெரிய அளவில் பயன் பெறுவார்கள் என்றும் மருத்துவமனை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

The post கிம்ஸ் ஹெல்த் இலவச இதய மருத்துவ முகாம் நாகர்கோவில் ஹோம் சர்ச் வளாகத்தில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: