திருச்செங்கோடு, செப்.9: திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 8 காவல் நிலையங்களை டிஐஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு டிஎஸ்பி அலுவலகத்தில், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு நகரம், புறநகர், அனைத்து மகளிர் காவல்நிலையம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், மொளசி, பள்ளிபாளையம் மற்றும் வெப்படை ஆகிய காவல் நிலையங்களின் பணிகளை, அவர் ஆய்வு செய்தார். அப்போது, டிஎஸ்பி இமயவரம்பன் உள்ளிட்ட 8 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களிடம் காவல்நிலைய செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். காவல் நிலைய ஆவணங்களையும் ஆய்வு செய்தார். மேலும், சட்டம் -ஒழுங்கை நிலை நாட்ட தேவையான அறிவுரைகளை அவர் வழங்கினார்.
The post காவல் நிலையங்களில் டிஐஜி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.