×

கானா பாடகி, இயக்குனர் மீது வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் ஐயப்பன் பாடலை கொச்சைப்படுத்தியதாக

வேலூர், நவ. 26: ஐயப்பன் பாடலை கொச்சைப்படுத்தியதாக கானா பாடகி, இயக்குனர் மீது வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் வேலூர் மாவட்ட தலைவர் நித்யானந்தம் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் நேற்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் கானா பாடகி, இயக்குனர் ஆகியோரை கைது செய்யக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களின், மனம் புண்படும் வகையில் எல்லாம் வல்ல ஐயன் ஐயப்பன் பெயரை கொச்சைப்படுத்தும் வகையில், சமூக வலைதளங்கள் மூலம் பொதுமேடையில் பாடல் பாடி வரும் கானா பாடகி இசைவாணி மற்றும் பாடலை வழங்கிய நீலம் தயாரிப்பு நிறுவன இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post கானா பாடகி, இயக்குனர் மீது வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் ஐயப்பன் பாடலை கொச்சைப்படுத்தியதாக appeared first on Dinakaran.

Tags : Vellore SP ,Ayyappan ,Vellore ,Ayyappa ,Sabarimala Ayyappa Seva Samaj ,president ,Nithyanandam ,
× RELATED ஐயப்பன் அறிவோம் 36: சுவாமி ஐயப்பன்