சென்னை: தேர்தல் காலத்தில் ஆட்சியை விமர்சித்து பேசுவது ராமதாஸுக்கு வழக்கம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். பா.ம.க. உடன் தேர்தல் கூட்டணி வைத்திருந்தாலும் தேர்தல் நேரத்தில் அரசை ராமதாஸ் விமர்சிப்பது வழக்கம் என அவர் தெரிவித்தார். மேலும் ராமதாஸ் கருத்துக்கும் தேர்தல் கூட்டணிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.
