×

காங்கயம் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்பனை

 

காங்கயம், ஜூலை 4: காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது.வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.  நேற்று கூடிய வார சந்தையில் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலை இல்லாத்ததரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தக்காளியின் வரத்து சற்று குறைய தொடங்கி இருப்பதால் தக்காளியின் விலை ஏறி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் வரும் நாட்களில் தக்காளியின் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post காங்கயம் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kangayam ,
× RELATED காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு...