கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் சார்பில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயின்று வரும் 3,093 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தேசிய தேர்வு முகமையால் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுபவர் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

8 மற்றும் 10 ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத்தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான விபரங்களை https;//scholarships.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: