கல்லூரி மாணவர்கள் மோதல் தொழிலாளி உள்பட 4 பேர் கைது

 

திருப்பூர்,ஆக.5: திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் காங்கயத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே சமூக வலைதளத்தில் கேலியாக பதிவிட்டது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் கல்லூரி வளாகத்திற்குள் அடிக்கடி சண்டையிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயாபுரம் பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் சண்டையிட்டு கொண்டனர். இதில் 4 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். இது தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவரான கிஷோர் (20), ஸ்ரீகெளதம் (21),பூபதி ராஜா (20), மற்றும் பனியன் தொழிலாளி ஈஸ்வரன் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

The post கல்லூரி மாணவர்கள் மோதல் தொழிலாளி உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: