புதுடெல்லி : தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என, சமூக ஆர்வலர் அக்னிவேஷ் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து ஹரியானா முன்னாள் எம்எல்ஏவும், சமூக ஆர்வலருமான சுவாமி அக்னிவேஷ் கூறுகையில், இந்த சம்பவம் தமிழக வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக திகழ்கிறது.தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரிக்க அக்னிவேஷ் கோரிக்கை
