கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் உதவி மையம் தொடக்கம்

 

பாடாலூர், செப் 20: ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் முதலமைச்சரின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான உதவி மையங்கள் செயல்பட நேற்று தொடங்கியது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேற்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இ-சேவை மையங்கள் மூலம் அவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 30 நாட்களுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே நேற்று காலை முதல், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிப்பித்தனர். மேலும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள், ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரில் சென்று தெரிந்து கொண்டனர். ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற மையங்களில் தாசில்தார் முத்துக்குமரன், தலைமையிடத்து துணை தாசில்தார் கீதா மற்றும் வருவாய் துறை பணியாளர்கள் உள்ளிட்ட பார்வையிட்டு, விண்ணப்பங்கள் குறித்த காரணங்களை பெண்களுக்கு தெரிவித்தனர்.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் உதவி மையம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: