கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பெண்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கலெக்டர் கள ஆய்வு சரியாக கள பணியாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு

புதுக்கோட்டை, செப். 4: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பெணகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கலெக்டர் மெர்சி ரம்யா கள ஆய்வு மேற்கொண்டார். மேலும் சரியாக களப்பணியாற்றி தகுதியானவர்கள் பயனடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தின் உண்மைத் தன்மை குறித்து கள ஆய்வு செய்யும் பணிகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மேற்பார்வையிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மார்ச் 27ம் தேதி சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் நிற்கும் வகையில், மாதம் ரூ.1,000 வழங்கிடும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பெண்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கலெக்டர் கள ஆய்வு சரியாக கள பணியாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: