கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதோர் விண்ணப்பிக்கும் வழிமுறை

மயிலாடுதுறை, செப்.21: தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்து கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரமாகும். இந்த முதன்மையான திட்டத்தின் மூலம் மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் திட்டமானது 15.9.2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 தொகையானது வரவு வைக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளின் கைப்பேசி எண்ணிற்கு வங்கியிலிருந்தோ அல்லது ஏதேனும் வங்கி சார்ந்தோ அழைக்கிறோம் என அழைப்பு வந்து ஏதேனும் கடவுச்சொல் அல்லது ஏ.டி.எம் அட்டையின் பின்புறம் உள்ள மூன்று இலக்க எண்ணை கேட்டால் தெரிவிக்க வேண்டாம். மேலும் விண்ணப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான குறுஞ்செய்தி 18.09.2023 முதல் இந்த மாத இறுதி வரை அவர்களுடைய கைபேசி எண்ணிற்கு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தகுதியான விண்ணப்பதாரராக இருந்து நிராகரிக்கப்பட்டதாக கருதும் விண்ணப்பதாரர்கள் தங்கள் மேல்முறையீட்டினை அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக கட்டணம் ஏதுமின்றி வருவாய் கோட்ட அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் தகுதியான விண்ணப்பதார்களின் நிராகரிப்பிற்கான காரணம் தெளிவாக, அறிந்து கொள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது அறிவிக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கென உதவி முகாம்கள் நடைபெறும் இடங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மயிலாடுதுறை, தொலைபேசி எண்: 04364 222588, மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலகம், தொலைபேசி எண்: 04364 222033. சீர்காழி வருவாய் கோட்ட அலுவலகம், தொலைபேசி எண்: 04364 270222 மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364 270222, 222456. குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம், கைப்பேசி எண்: 9943506139, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364 270527, தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364 289439, ஆகிய இடங்களில் அலுவலக நாட்களில் உதவி முகாம்கள் (Help Desk) நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்கள், மேல்முறையீடு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தெரிந்துக்கொண்டு மேல்முறையீடு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மகாபாரதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதோர் விண்ணப்பிக்கும் வழிமுறை appeared first on Dinakaran.

Related Stories: