கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிருக்கு சிறப்பு முகாம்: 2 நாள் நடக்கிறது

 

விருதுநகர், ஆக.2: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட விண்ணப்பதாரர்களுக்கு 2 நாள் முகாம் நடைபெற உள்ளது. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற முதல் கட்டமாக விண்ணப்பதிவு முகாம் ஏப்.24 முதல் ஆக.4 வரை அனைத்து ஊரக பகுதிகளில் உள்ள ரேசன்கடை பகுதிகளில் அமைந்துள்ள முகாம்களில் நடைபெற்று வருகிறது.

சிறப்பு முகாம்களில் விடுபட்ட விண்ணப்பதாரர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அந்தந்த முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெறும். ஊரக பகுதிகளில் உள்ள விடுபட்ட மற்றும் பதிவு செய்ய தவறிய விண்ணப்பதாரர்கள் இரண்டு நாட்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பான சந்தேகங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04562-252602ல் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிருக்கு சிறப்பு முகாம்: 2 நாள் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: