திருப்பூர், அக்.6: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகிறார்கள். அவர்களது வாழ்வாதாரமும் மேம்பட்டு வருகிறது. இந்நிலையில், முதுகு தண்டவட பாதிப்பு உள்ளவர்களுக்கு பேட்டரி வீல் சேர் தமிழக அரசு வழங்கி வருகிறது.
இதற்கான பயனாளிகள் தேர்வு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி வசந்த ராம்குமார் கூறுகையில்,“முதுகு தண்டவட பாதிப்பு உள்ளவர்களுக்கு பேட்டரி வீல் சேர் வழங்க பயனாளிகள் தேர்வு நடந்தது. இதில், முதுகு தண்டவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சோதனை நடைபெற்றது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் வீல் சேர் வழங்கப்படும்’’ என்றார்.
The post கலெக்டர் அலுவலகத்தில் பேட்டரி வீல் சேர் வழங்க பயனாளிகள் தேர்வு appeared first on Dinakaran.