கலந்தாய்வில் பங்கேற்கும் குரூப் 4 வெற்றியாளர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி

 

மன்னார்குடி, ஜூலை 17: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த தென்பரை இலவச பயிற்சி மையத்தில் குரூப் 4 கலந்தாய்வில் பங்கேற்கும் வெற்றியாளர்களுக்கான வழிகாட் டல் நிகழ்ச்சி பயிற்சி மைய நிறுவனர் சுப்ரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளபடி வரும் 20 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை குரூப் 4 பணியிடங்களுக்கான கலந் தாய்வு சென்னையில் நடைபெற உள்ளது. தென்பரை இலவச பயிற்சி மைய த்தில் படித்த 8 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ளனர். கலந்தாய்வின் போது, எந்தெந்த துறைகளை முன்னுரிமையின் அடிப்படை யில் தேர்ந்தெடுக்கலாம் என்பதற் கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஊரக வளர் ச்சி துறை செல்வம், பத்மா, பத்திர பதிவுத்துறை ஸ்டாலின், வருவாய் துறை சத்யராஜ், காயத்ரி, நீதித்துறை அபிராமி, பள்ளிக்கல்வித்துறை சீதாலட்சுமி, கல்லூரி கல்வித்துறை ஐஸ்வர்யா, பேரூராட்சி நிர்வாகம் ஜெகவீரபாண்டியன் ஆகிய பல அரசுத் துறைகளில் பணியாற்றக்கூடிய அலுவலர்களால் துறை ரீதியான வாய்ப்புகள் தேர்வர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கல்விக் குழு தலைவர் கலைவாணி மோகன் பேசுகையில், \”நீங்கள் ஒவ்வொருவரும் ஆர்வம், ஈடுபாடு, முயற்சி, உழைப்பு ஆகியவற்றை பின்பற்றி செயல்பட்டால் இலக்கை எளிதாக அடையலாம் என்றார். மாநில அளவில் 181 வது தரநிலை பெற்று முதல் நாள் கலந் தாய்வில் பங்கேற்கும் சித்ரா மற்றும் ஜான்சி எமிலி, கோகிலராணி, முத்து மணி, சிந்துஜா, நெல்சன், பிரகதீஸ், ருக்மணி, செந்தில்நாதன், விமலா, ஆசி ரியர் அய்யப்பன், பெற்றோர்கள் பயிற்சி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பயிற்சி மையத்தின் முதல்வர் வைரமுத்து வரவேற்றார். சமு தாயக் குழுமத்தின் பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

The post கலந்தாய்வில் பங்கேற்கும் குரூப் 4 வெற்றியாளர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: