சென்னை: இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு, கம்பியூட்டர் மூலம் போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து கொடுப்பதாகம், அதற்காக 10 லட்சம் வரை பெறுவதாகவும் திருவல்லிக்கேணி டிராவல்ஸ் நடத்தி வரும் வீரகுமார் மற்றும் ஊழியர்கள் கார்த்திகேயன், சரவணன், உமர் ஹசன், அம்ஜத்குமார், சக்திவேலு, பாலாஜி, சுரேஷ், குணாளன், கிருஷ்ணமூர்த்தி, ஆகிய 11 பேரை மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த ஜூன் 25ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், குன்றத்தூர், பத்மாவதி நகரில் தங்கியிருந்த இலங்கை பெண் தேவிகா மற்றும் கிருஷ்ணராஜ் ஆகியோரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
