×

கரூர் பாதரசலிங்க சிவன் கோயிலில் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள் வழிபாடு

கரூர், நவ. 29: ரஷ்ய நாட்டை சேர்ந்த அலெக்சி என்பவர் இந்தியாவை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்துள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஒரு ஜோதிடரின் நட்பு ஏற்பட்டு, அவரின் ஆலோசனையின்பேரில் தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இதனை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாட்டைச்சேர்ந்த இவரின் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து தமிழகம் வந்த இவர்கள் கரூர் வந்தனர். கரூரை சுற்றிலும் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று வந்த இவர்கள், கரூர் வெண்ணைமலையில் உள்ள பாதரசலிங்க கோயிலுக்கு வந்தும் தரிசனம் செய்தனர். அங்கு வழிபாடு நடத்திய இவர்கள், தியான மண்டபத்தில் அமர்ந்தும் தியானம் மேற்கொண்டனர்.

The post கரூர் பாதரசலிங்க சிவன் கோயிலில் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Tags :
× RELATED வங்கிகள் மூலமாக விண்ணப்பித்து...