அரவக்குறிச்சி, டிச. 21: ஈசநத்தம் சந்தை வளாகத்திற்கு அடிப்படை வசதி ஏற்படுத்தித்தரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். அடிப்படை வசதி இல்லாத ஈசநத்தம் சந்தை வளாகத்தை மறு சீரமைத்து விரிவாக்கம் செய்ய விவசாயிகள் மற்றும் சந்தை வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சியை அடுத்த ஈசநத்தத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. இதில் கடை போட, 150க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகின்றனர்.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, ஏராளமானோர் இங்கு வந்து காய்கறிகள், மளிகைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் சந்தை வளாகத்தில் இடப்பற்றாக்குறை, குடிநீர், மின்சாரம், கடை அமைக்கும் மேடை, கழிவறை என, எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் மக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சந்தைக்கு இடம் ஒதுக்கியோ அல்லது தற்போது செயல்பட்டு வரும் சந்தையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post அடிப்படை வசதி இல்லாத ஈசநத்தம் சந்தையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.