கரூர்: கிணற்றில் விழுந்த கூலித் தொழிலாளி நீச்சல் தெரியாததால் இறந்தார். கரூர் வடிவேல் நகரைச் சேர்ந்தவர் அருண் (41). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 15ம்தேதி மாலை அரிக்காரம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் கிணற்றில் முழ்கி அருண் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த டவுன் போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post கரூர் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி appeared first on Dinakaran.