கருவந்தாவில் புதிய ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா ஜெயபாலன், பழனி நாடார் எம்எல்ஏ பங்கேற்பு

சுரண்டை,அக்.15: சுரண்டை அருகே கரு வந்தாவில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு பழனி நாடார் எம்எல்ஏ, மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் அடிக்கல் நாட்டினர். சுரண்டை அருகே உள்ள கருவந்தாவில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை கட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு புதிய ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.எம்.அன்பழகன் தலைமை வகித்தார். ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் பழனி என்ற பால்துரை, வீராணம் சேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன், பொறியாளர் அணி மணிகண்டன், கிளைச்செயலாளர்கள் வெள்ளத்துரை, பாலசுப்ரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிலிப் ராஜா, காங்கிரஸ் நிர்வாகிகள் கணேசன், குத்தாலிங்கம், செல்வம் மற்றும் ஏராளமான திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கருவந்தாவில் புதிய ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா ஜெயபாலன், பழனி நாடார் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: