கரிசல்குளம் ஊராட்சி திருவள்ளுவர் நகரிலுள்ள அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை ராஜபாளையம் எம்எல்ஏ பங்கேற்பு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட மேலப்பாட்டு கரிசல்குளம் ஊராட்சி திருவள்ளுவர் நகரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதனை தொடர்ந்து ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அப்பணிக்கு எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்று அடிக்கல் நாட்டப்பட்டது.இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ தங்கபாண்டியன் பேசுகையில், ‘‘இந்தியாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிக்கும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களின் நலனுக்காகவும் கல்விக்காகவும் பட்ஜெட்டில் ரூ.33,000 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.  அவர் வழியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ராஜபாளையம் தொகுதியிலுள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவள்ளுவர் நகரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, அயன் கொல்லங்கொண்டான் ஊராட்சியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, ராஜபாளையம் நகரிலுள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது’’என்றார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் , துணை சேர்மன் துரைகற்பகராஜ், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் , பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலா, கவுன்சிலர் நவமணி ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்….

The post கரிசல்குளம் ஊராட்சி திருவள்ளுவர் நகரிலுள்ள அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை ராஜபாளையம் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: