கம்பத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

கம்பம், ஆக. 23: கம்பம் மெயின் ரோடு சிக்னலில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் ஆட்களை ஏற்றி செல்ல ஆட்டோக்கள் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஒரே ஆட்டோவில் 10 முதல் 15 பேர் வரை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது எனவும், எனவே போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது, இந்நிலையில் நேற்று மாலை கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கம்பம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன், ஞானபண்டித நேரு முன்னிலை வகித்தனர். உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராமன் தலைமை வகித்து, ஆட்டோ ஓட்டுனர்களிடம் சாலை விதிமுறைகளை குறித்தும், விபத்து ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் குறித்தும் பேசினார். மேலும் சவாரி செல்லும் ஆட்டோகளுக்கு முழுமையாக அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும், ஆவணங்களில் குறிப்பிட்ட அளவு ஆட்களை ஏற்றி செல்ல வேண்டும், டிரைவர்கள் சீருடை அணிய வேண்டும், ஓட்டுனர் உரிமம் இருக்க வேண்டும், ஓவர் ஸ்பீடாக செல்ல கூடாது, இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார். பின்னர் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

The post கம்பத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: