×

கமுதி அருகே கண்மாய் ஆக்கிரமிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கமுதி, அக்.4: கமுதி அருகே கண்மாய் ஆக்கிரமிப்பு கண்டித்து பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் கிராமத்திற்கு சுமார் 300 ஏக்கர் அளவுள்ள கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கோவிலாங்குளம் கிராமத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. தற்போது கோவிலாங்குளம் நீர் பிடிப்பு பகுதிகளில் 15 ஏக்கர் அளவில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அடைத்து, தண்ணீர் தேங்காத வண்ணம் செய்துள்ளனர். இதுகுறித்து கமுதி வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை.

இதனால் கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 100 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கோவிலாங்குளம் ஊரின் முன்பு கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வருவாய்த்துறை உதவியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதி அளித்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபடாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்மாய் ஆக்கிரமிப்பை தடுக்க கோரியும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post கமுதி அருகே கண்மாய் ஆக்கிரமிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanmai ,Kamudi ,Kovilangulam ,Dinakaran ,
× RELATED மதுரை வண்டியூர் கண்மாயை உரிய...