நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடி குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர், அதிகாரிகள் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஐகோர்ட் உத்தரவை அடுத்து கவுன்சிலிங்கில் ஏற்பட்டு உள்ள குழப்பம் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும் இதற்கான காரணம் குறித்து கண்டறிந்து அதற்கான காரணம் குறித்து விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனால் மாணவர்கள் மத்தியில் மீண்டும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. காலந்தாய்வு நடைபெற்று வருவதால் பல மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டது. நிர்வாக குளறுபடி காரணமாக தேர்வை சரியாக எழுத முடியாத மாணவர்கள் தற்போது குழப்பத்தில் உள்ளர். மேலும் அவர்களுக்கு இடம் கிடைக்காத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் தூணை முதல்வர், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: