கட்டிமேடு அரசு பள்ளியில் இலக்கிய மன்ற போட்டி

 

திருத்துறைப்பூண்டி, பிப்.19: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் இலக்கிய மன்ற போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. தமிழ் இலக்கிய மன்றம் ஒருங்கிணைப்பாளர் மாலதி வரவேற்றார். இலக்கிய மன்ற போட்டிகளை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல் முனாப் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை வைகித்து பேசும்போது மாணவர்களின் இலக்கிய போட்டித் திறன்களை வெளிப்படுத்துவதற்கும், பொது அறிவு சார்ந்த போட்டிகளுக்கு தங்களை தயார் படுத்துவதற்கும் இம் மன்றங்கள் பயன்படுகின்றன என்றார்.

6 முதல் 12ம் வகுப்பு வரை கதை எழுதுதல், கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.மேலும் கதையை எழுதுதல் என்பது கதாபாத்திரங்கள் மற்றும் ஒரு அமைப்பைக் கொண்டு ஒரு கதையை வடிவமைப்பதை உள்ளடக்கியது என்று கூறி கதையை எழுதுதல் வாயிலாக செய்திகள் அல்லது கருப்பொருள்களை தெரிவிப்பது என்றார். நிறைவாக ஆசிரியை மதுராந்தகி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியை வேம்பு செய்திருந்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி நிறைவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post கட்டிமேடு அரசு பள்ளியில் இலக்கிய மன்ற போட்டி appeared first on Dinakaran.

Related Stories: