தர்மபுரி, மார்ச் 11: தர்மபுரி மாவட்டம், அரூர் கே.கே.நகர் சுடுகாடுமேடு பகுதியை சேர்ந்தவர் சாதிக் (53), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜரீனா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம், குரங்குபள்ளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சாதிக் சென்றார். அப்போது, அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து, அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கடைக்கு சென்றவர் மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.