கடற்படை சார்பில் காரைக்கால் துறைமுகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

நாகப்பட்டினம்: இந்திய கடற்படை சார்பில் காரைக்கால் துறைமுகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று, நாளை (16, 17ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து நாகப்பட்டினம் கடற்படை அலுவலகம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை தலைமையகம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்களை நடத்த அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து நாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகம் சார்பில் இன்று (16ம் தேதி), நாளை (17ம்தேதி) ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு மருத்துவ முகாம் காரைக்கால் துறைமுகத்தில் நடத்தப்படுகிறது. பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், கண், தோல், காதுமூக்கு தொண்டை, மகளிர் மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் சிறப்பு டாக்டர்களை கொண்டு வழங்கப்பட உள்ளது. எனவே, நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவ கிராம மக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். கூடுதல் தகவல் அறிய நாகப்பட்டினம், காரைக்கால் மீன்வளத்துறை, நாகப்பட்டினம் இந்திய கடற்படை பிரிவு அலுவலகம் ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம். 8754388304 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கடற்படை சார்பில் காரைக்கால் துறைமுகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: