தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் பாஜவினர் ஒட்டும் பேனர்களை கடந்த 3 மாதங்களாக மர்ம நபர் கிழித்து வருவதாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன் அந்த நபரை பிடிக்க அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாஜவினர் ஒட்டிய பேனரை மர்ம நபர் கிழிப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. உடனே இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் வடசென்னை மாவட்ட பாஜ ஊடகப்பிரிவு தலைவர் நவீன் பிரகாஷ் புகார் அளித்தார்.
பாஜ ஒட்டிய பேனரை கிழித்த அதிமுக பிரமுகர்
