சென்னை: நில அபகரிப்பு செய்ததாக முன்னாள் ஏ.டி.ஜி.பி.துக்கையாண்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூரில் உள்ள கரன்தாஸ் என்பரின் நிலத்தை அபகரித்ததாக துக்கையாண்டி அவரது மனைவி மற்றும் மகள் மீது வழக்கு தொடரப்பட்டது. துக்கையாண்டிக்கு எதிராக வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
